ஜெனிவாவில் இலங்கை இன்று கூனிக்குறுகி நிற்க ராஜபக்சக்களே முழுக்காரணம் - நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார

Kanimoli
2 years ago
ஜெனிவாவில் இலங்கை இன்று கூனிக்குறுகி நிற்க ராஜபக்சக்களே முழுக்காரணம் - நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார

"ஜெனிவாவில் இலங்கை இன்று கூனிக்குறுகி நிற்க ராஜபக்சக்களே முழுக்காரணம்" என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, 

”இலங்கை மீதான ஜெனிவா தீர்மானங்களை தாம் ஒருபோதும் ஏற்கமாட்டோம்.  

இந்த அரசால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

ராஜபக்சக்களின் தான்தோன்றித்தனமான சில முடிவுகளால் நாடு இன்று படுகுழியில் விழுந்துள்ளது.

ராஜபக்சக்களின் சகாவான ரணில் விக்ரமசிங்கவால் நாட்டை மீட்டெடுக்க முடியாது. மக்கள் ஆணை மூலம் புதிய அரசை நிறுவினால்தான் நாட்டுக்கு விடிவு கிடைக்கும்" என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!