நாட்டில் உணவுப் பொதிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது - சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்

Kanimoli
3 years ago
நாட்டில் உணவுப் பொதிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது -  சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்

நாட்டில் உணவுப் பொதிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சமூகப் பாதுகாப்பு வரி விதிக்கப்பட்ட உடனேயே, பெரும்பாலான பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதாகவும் இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தள்ளார்.

இருப்பினும் மதிய உணவுப் பொதியின் விலையை அதிகரிப்பது தொடர்பில் தாங்கள் இதுவரை எந்தவொரு கூட்டு தீர்மானமும் எடுக்கவில்லை என்றும், ஆனால் பெரும்பாலான ஹோட்டல்கள் உணவுப் பொதியின் விலையை ரூ.10, ரூ.15, மற்றும் ரூ.20 என உயர்த்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விலையேற்றத்தால் பிரைட் ரைஸ், கொத்து மற்றும் இதர துரித உணவு வகைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில், லிட்ரோ எரிவாயுவின் சமீபத்திய விலைக் குறைப்பு, மதிய உணவுப் பொதிகளின் விலையை ஒரு கணிசமான விலையில் வைத்திருக்க மிகவும் உதவியாக இருந்தது.

எவ்வாறாயினும், நாளை முதல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை லிட்ரோ நிறுவனம் குறைத்த பின்னர் முடிவை அறிவிப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4