மட்டக்களப்பு உள்ள பகுதி ஒன்றில் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் யானை தாக்கி பலி

Kanimoli
3 years ago
மட்டக்களப்பு உள்ள பகுதி ஒன்றில் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் யானை தாக்கி பலி

மட்டக்களப்பு உள்ள பகுதி ஒன்றில் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்றையதினம் (03-10-2022) கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள தாந்தாமலை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் மகிழடித்தீவைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான செல்லத்துரை சிவலிங்கம் (வயது 45) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் இன்று காலை 7 மணியளவில் தனது வீட்டில் இருந்து தாந்தாமலைப் பகுதியிலுள்ள அடைச்சல் களப்பகுதியில் மீன்பிடிப்பதற்காகச் சென்று கொண்டிருந்த போது வீதியின் குறுக்கே வந்த யானை அவரைத் தூக்கி வீசியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4