யாழில் பாடசாலை மாணவியின் காணொளியால் நேர்ந்த விபரீதம்

Kanimoli
3 years ago
யாழில் பாடசாலை மாணவியின் காணொளியால் நேர்ந்த விபரீதம்

வலிகாமம் வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயது மாணவியின் காணொளி உரையாடலை பதிவு செய்துள்ளனர்.

அத்தோடு அதைவைத்து மிரட்டி அவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஏழாலையைச் சேர்ந்த 20 மற்றும் 25 வயது இளைஞர்கள் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
மாணவியுடன் இளைஞன் ஒருவன் வீடியோவில் உரையாடலை சில மாதங்களுக்கு முன்னர் மேற்கொண்டுள்ளான் .

இதன்போது அந்த உரையாடலை பதிவு செய்துள்ளான்.மாணவி துவாயுடன் இருக்கும் அந்த உரையாடல் பதிவை தனது உறவினரான இன்னொரு இளைஞனுக்கும் அவன் அனுப்பியுள்ளான் .

அவ்வாறு தனது நண்பனின் மூலம் கிடைத்த அந்த வீடியோ பதிவை ஏனை யோருக்கும் அனுப்ப உள்ளதாக மிரட்டி மாணவியை அந்த இளைஞன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளான் .

அதேவேளை இந்த வீடியோ பதிவு பல இடங்களிலும் பகிரப்பட்டுள்ளது . மாணவி கல்வி கற்கும் பாடசாலைச் சமூகத்துக்கு இந்த விடயம் தெரியவந்ததைத் தொடர்ந்து ஆசிரியர்களால் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் ஊடாக பொலிஸ் நிலையத்துக்கு இது குறித்து தகவல் வழங்கப்பட்டது .

மேலும் இதனையடுத்து வீடியோ பதிவு செய்த இளைஞனும் அதனைப் பயன்படுத்தி மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இளைஞனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4