இலங்கையில் பல்வேறு நெருக்கடிகள் காணப்பட்டாலும் மகிந்த ஆட்சியை தன்வசம் வைத்துள்ளதாக தகவல்

Kanimoli
3 years ago
இலங்கையில் பல்வேறு நெருக்கடிகள் காணப்பட்டாலும் மகிந்த  ஆட்சியை தன்வசம் வைத்துள்ளதாக தகவல்

இலங்கை சமூக பாதுகாப்புச் சபையினால் “வட மாகாணத்திற்கான சமூக பாதுகாப்பு தேசிய விருது வழங்கும் நிகழ்வு” சமூக பாதுகாப்பு சபையின் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் திரு.பி.பிரதீபன் தலைமையில் கடந்த வியாழக்கிழமை யாழ்.தனியார் விடுதியில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் தலைவர் திரு.சமன் ஹன்டரகம அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக சமூக பாதுகாப்பு சபையின் பொது முகாமையாளர் கே.ஏ.எஸ்.பி.களுஆராச்சி மற்றும் பிரதி முகாமையாளர் திரு. எஸ்.டபுள்யு.லக்ஸ்மன் ஆகியோரும், மற்றும் விருந்தினர்களாக மேம்பாட்டு முகாமையாளர் திரு.டி.எஸ்.லக்மல், சிரேஷ்ட இணைப்பாளர் ரஞ்சித் தேஸநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

சமூக பாதுகாப்பு சபையின் விருது வழங்கும் நிகழ்வில் அகில இலங்கை ரீதியில் 2020, 2021 ஆம் ஆண்டுகளில் முதலாம் இடத்திற்கான விருதினை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

அத்தோடு 2019 ஆம் ஆண்டில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்திற்கான விருதினை யாழ் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

மேலும், சமூக பாதுகாப்பு சபையின் விருது வழங்கும் நிகழ்வில் அகில இலங்கை ரீதியில் 2020 ஆம் ஆண்டில் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் திரு.சண்முகராஜா சிவஸ்ரீ முதலாம் இடத்தினையும், கரவெட்டி பிரதேச செயலாளர் திரு.ஈஸ்வரநாதன் தயாபரன் இரண்டாம் இடத்தினையும், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் திருமதி. யசோதா உதயகுமார் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

மேலும், 2020ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் மருதங்கேணி பிரதேச செயலாளர் குமாரசுவாமி பிரபாகரமூர்த்தி இரண்டாம் இடத்தினையும், பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4