விசேட நிலையான வைப்பு வட்டி திட்டம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தம்

Kanimoli
3 years ago
விசேட நிலையான வைப்பு வட்டி திட்டம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தம்

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்பு வட்டி திட்டம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக கடந்த மாதம் 22 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய, உரிய பணிப்புரைகள் மத்திய வங்கியினால் வர்த்தக வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நேற்று முதல் சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலுவை வைப்பு மற்றும் புதுப்பித்தல் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம் எனவும் வர்த்தக வங்கிகள் பணிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக நிலையான வைப்பாளர்களுக்கு 14.5 சதவீதமான வட்டி வழங்கப்பட்டுள்ள நிலையில் 60 வயதிற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு 15 சத வீத வட்டி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4