பூநகரி – கிராஞ்சி பகுதியில் கடலட்டைப் பண்ணை அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு

Mayoorikka
3 years ago
பூநகரி – கிராஞ்சி பகுதியில் கடலட்டைப் பண்ணை அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு

பூநகரி – கிராஞ்சி இலவன்குடா கடற்பகுதியில் பாரம்பரியமாக சிறகுவலைத் தொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்கள் அப்பகுதியில் கடலட்டைப் பண்ணை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றுக் காலை முதல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

குறித்த இலவன்குடா கடற்பரப்பில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உட்பட மீனவர்கள் சிறகுவலைத் தொழிலின் ஊடாக இறால், நண்டு, மீன் போன்றவற்றை பிடிப்பதை அன்றாடா வாழ்வாதாரத் தொழிலாக மேற்கொண்டுவருகின்றனர். 

இந் நிலையில் அவர்களது வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் தற்போது கடலட்டைப் பண்ணைகள் அமைக்கும் முயற்சிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. 

இதனையடுத்தே நேற்றுக் காலையிலிருந்து உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் தங்களுக்கு சாதகமான முடிவை சம்பந்தப்பட்டவர்கள் வழங்கும் வரை தாம் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4