நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான காலநிலை சற்று அதிகரிக்க கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்

Reha
3 years ago
நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான காலநிலை சற்று அதிகரிக்க கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்

அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்கு பகுதியில்மழையுடனான காலநிலை சற்று அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் சுமார் 75 மி.மீ. கனமழை பெய்யக்கூடும் என்பதுடன் வடமேற்கு மாகாணத்தில் இடைக்கிடை கன மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கோரியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4