கண்டிக்கு சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விஷேட அறிவிப்பு

#kandy #Tourist
Prasu
3 years ago
கண்டிக்கு சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விஷேட அறிவிப்பு

கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி வரை விசேட சொகுசு சுற்றுலா புகையிரதத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் ஒவ்வொரு வார இறுதியிலும் இயக்கப்படவுள்ளது.

புதிய சுற்றுலா ரயில் கொழும்பு கோட்டையில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு காலை 9.18 மணிக்கு கண்டியை சென்றடையும்.

மீண்டும் மாலை 4.50 மணிக்கு கண்டியில் இருந்து புறப்படும் ரயில் இரவு 7.40 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைகிறது.

தலதா மாளிகை மற்றும் பேராதனை தாவரவியற் பூங்காவை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு இந்த விசேட ரயில் திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் வகுப்பு டிக்கெட்டின் விலை 2,000 ரூபாய் மற்றும் 2 ஆம் வகுப்பு டிக்கெட்டின் விலை 1,500 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, கோட்டையில் இருந்து அனுராதபுரத்துக்கு விசேட சொகுசு சுற்றுலா ரயிலும் விரைவில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4