நுரைச்சோலை மின்நிலையத்தில் பராமரிப்புக்குழு இன்று ஆய்வு!

Mayoorikka
3 years ago
நுரைச்சோலை மின்நிலையத்தில் பராமரிப்புக்குழு இன்று ஆய்வு!

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாவது அலகில் பழுது ஏற்பட்டுள்ள இடத்தை, பராமரிப்பு குழுவினர் இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.

இதற்கமைய, நாளை மறுதினத்திற்குள் திருத்தப்பணிகளில் முன்னேற்றம் ஏற்படும் என அதன் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் 3ஆம் அலகில் இருந்து இழந்த 270 மெகாவோட் மின்சாரம் மீண்டும் தேசிய கட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நுரைச்சோலையின் 3ஆம் அலகு செயலிழந்தமையினால் 270 மெகாவோட் மின்சாரம், களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் மற்றும் எம்பிலிபிட்டி ஏஸ் தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து பெறப்பட்டுள்ளது.

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்திற்கு மின் உற்பத்திக்கான நப்டா கிடைக்கப்பெற்றதன் மூலம் 170 மெகாவோட் மின்சாரம் தேசிய கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அத்துடன் எம்பிலிபிட்டிய ஏஸ் தனியார் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து 100 மெகாவோட் மின்சாரம் பெறப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4