23 பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்ற உத்தரவு

23 பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் அரசியல்வாதிகளின் வீடுகள் எரிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய உயர்செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி 23 பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள்
குறிப்பாக மே மாதம் இடம்பெற்ற போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலின் எதிரொலியாக பல முக்கிய அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவங்களை தடுக்க அந்தந்த பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 23 பொலிஸ் நிலைலயப் பொறுப்பதிகாரிகள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



