அரசுடன் இணைவதற்கு நடிகைக்கு பேரம் பேசப்பட்ட பெருந்தொகை பணம் - வெளிவந்த இரகசியம்
Kanimoli
3 years ago
தம்முடன் இணைந்து கொண்டால் பெரும் தொகை பணம் வழங்கப்படுமென அரசாங்கத்திடம் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டதாக நடிகை தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார்.
அவர்களின் மடியில் தான் ஒருபோதும் விழமாட்டேன் என்று அவர்களிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
ஆனால் நாளைய போராட்டத்தின் இலக்குகளை நிறைவேற்றும் ஒருவருடன் அல்லது ஒரு குழுவுடன் தான் நிற்பேன் என்றார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை அரசாங்கத்திற்கெதிராக ஜூலை மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது, அதிபர் செயலகத்திற்குள் பலவந்தமாக நுழைந்த சம்பவம் தொடர்பாக நடிகை தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.