ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் மூவர் கைது

#SriLanka #Protest #Arrest
Prasu
2 years ago
ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் மூவர் கைது

ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் மூவர் செவ்வாய்க்கிழமை (27) மேல்மாகாண குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பிலேயே சந்தேக நபர்கள் மூவரும் இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 22,40 மற்றும் 55 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கொழும்பு வடக்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!