எரிபொருள் விலை, செலவு விவரத்தை வெளியிட்ட அமைச்சர்!

Mayoorikka
3 years ago
எரிபொருள் விலை, செலவு விவரத்தை வெளியிட்ட அமைச்சர்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் (CPC) இறக்குமதி செய்யப்பட்ட பெற்றோலியப் பொருட்களின் விலை விபரம் மற்றும் விலை நிர்ணயம் தொடர்பான ஆவணத்தை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பகிர்ந்துள்ளார்.

ஆவணத்தின்படி, ஒரு லீட்டர் லங்கா ஒட்டோ டீசலுக்கு 31.88 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.

92 ரக பெற்றோல் லீட்டருக்கு 77.35 ரூபா இலாபமும், 95 ரக பெற்றோல் லீட்டருக்கு 187.43 ரூபா மற்றும் சுப்பர் டீசல் லீட்டருக்கு 48.30 ரூபா இலாபம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரின் கூற்றுப்படி, கடந்த 30 நாட்களின் சராசரி பிளாட் விலைகள், கடந்த 30 நாட்களின் சராசரி பிரீமியங்கள், கடந்த 30 நாட்களின் சராசரி மாற்று விகிதங்கள், சராசரி போக்குவரத்து செலவுகள் மற்றும் முழு விநியோக விலைகள் ஆகியவை இதில் உள்ளடக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4