முட்டை விலை தொடர்பில் இன்று மீண்டும் கலந்துரையாடல்! கால்நடை பராமரிப்பு இராஜாங்க அமைச்சர்

Mayoorikka
3 years ago
முட்டை விலை தொடர்பில் இன்று மீண்டும்  கலந்துரையாடல்! கால்நடை பராமரிப்பு இராஜாங்க அமைச்சர்

முட்டை விலை தொடர்பில் இன்று மீண்டும் ஆய்வு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்பு இராஜாங்க அமைச்சர் D.B.ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் இது தொடர்பான கலந்துரையாடல் நடத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முட்டை உற்பத்தியாளர்கள் முன்வைத்துள்ள உற்பத்திச் செலவு நியாயமானதா என்பது குறித்து இதன்போது பரிசீலிக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

அது தொடர்பில் மீண்டும் கலந்துரையாடி கட்டுப்பாட்டு விலையில் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாக கால்நடை பராமரிப்பு இராஜாங்க அமைச்சர் D.B.ஹேரத் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4