அரச அதிகாரிகளின் உடை தொடர்பான சுற்றறிக்கை வெளியீடு!

Mayoorikka
3 years ago
அரச அதிகாரிகளின் உடை தொடர்பான சுற்றறிக்கை வெளியீடு!

பணிகளில் ஈடுபடும்போது, பொதுச் சேவையின் கண்ணியத்தைக் காக்கும் வகையில் ஆண் பெண் இருபாலாருக்கும் பொருத்தமான மற்றும் அடக்கமான உடைகளை அணிய அனுமதிக்கும் வகையில் அரச அதிகாரிகளின் உடை தொடர்பான சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயாதுன்னே நேற்று இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். சுற்றறிக்கையின்படி ஆண்கள் நீளக் காற்சட்டை மற்றும் சட்டை அல்லது தேசிய உடையை அணிய வேண்டும். 

அதே நேரத்தில் பெண்கள் புடைவைகள், கண்டியன் அல்லது வேறு ஏதேனும் பொருத்தமான மற்றும் அடக்கமான ஆடைகளை அணிந்து பொது சேவையின் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும். 

இதேவேளை நாடாளுமன்றம், நீதிமன்றம், தேசிய அல்லது சர்வதேச விழாக்கள் அல்லது மாநாடுகள் போன்ற சிறப்பு நிகழ்வுகளுக்குள் அரச அதிகாரிகள் தேசிய உடை அல்லது பரிந்துரைக்கப்பட்ட உடையை அணிந்திருக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4