மாணவர்களால் வீடுகளிலிருந்து கொண்டுவரப்படும் உணவுகளின் போசாக்கு தொடர்பில் கண்காணிக்குமாறு ஆசிரியர்களுக்கு பணிப்புரை

Mayoorikka
3 years ago
மாணவர்களால் வீடுகளிலிருந்து கொண்டுவரப்படும் உணவுகளின் போசாக்கு தொடர்பில் கண்காணிக்குமாறு ஆசிரியர்களுக்கு பணிப்புரை

நாட்டிலுள்ள பாடசாலை கட்டமைப்பில் 78 வீதமான மாணவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய 7,925 பாடசாலைகளில் உணவு வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் மஹிந்த யாப்பா தெரிவித்துள்ளார்.

ஏனைய பாடசாலைகளுக்கு தனியார் பிரிவினரின் ஒத்துழைப்புடன் போசாக்கு செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மாணவர்களால் வீடுகளிலிருந்து கொண்டுவரப்படும் உணவுகளின் போசாக்கு தொடர்பில் கண்காணிக்குமாறு ஆசிரியர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4