அரச ஊழியர்களின் ஆடை குறித்து புதிய சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது

Kanimoli
3 years ago
அரச ஊழியர்களின் ஆடை குறித்து புதிய சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது

அரச ஊழியர்களின் ஆடை குறித்து புதிய சுற்றுநிரூபம் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது.

அரச உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்கு வரும் போது பொருத்தமான அலுவலக உடைகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கையை அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன வெளியிட்டுள்ளார்.

பெண்கள் அலுவலகங்களுக்கு செல்லும் போது புடவை, ஒசரி அல்லது அலுவலகத்திற்கு ஏற்ற உடை அணியலாம் என்று ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இருப்பினும், சிலர் சுற்றறிக்கையின் முதல் பகுதியை மாத்திரம் அமுல்படுத்துவதாகவும், பொருத்தமான அலுவலக ஆடையை மறந்து விட்டதாகவும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, தகுந்த அலுவலக உடையை அனுமதிக்க வேண்டும் என புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4