தலைநகரிலும் திலீபனுக்கு நினைவேந்தல்

Kanimoli
3 years ago
தலைநகரிலும் திலீபனுக்கு நினைவேந்தல்

தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வானது நேற்றைய தினம் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் நினைவு கூரப்பட்டது.

இந்நிலையில், தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று கொழும்பு மருதானையிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சமூக சமய நிலையத்தில் அருட்தந்தையர்களின் ஏற்பாட்டில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த நிகழ்வில் தியாகி திலீபனின் கோரிக்கைகள் மற்றும் அந்த கோரிக்கைகள் முன்னோக்கி நகர்த்தப்பட வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4