குற்றங்களில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர்களுக்காக கறுப்புப் பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது - உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன்
Kanimoli
2 years ago

பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர்களுக்காக கறுப்புப் பட்டியல் ஒன்று தயாரிக்கப்படவுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
பகிடி வதை, கொடுமைப்படுத்துதல், அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், வன்முறைக்கு வித்திடுதல் போன்ற குற்றச்சாட்டின் குறித்த பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது.
இவ்வாறான குற்றங்களில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களது பெயர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் அரசாங்க வேலைகள் மற்றும் தொழில்சார் நிலை புலமைப்பரிசில்கள் போன்றவற்றை வழங்கும்போதும் மற்றைய அரசாங்க வசதிகளை வழங்கும்போதும் புறக்கணிக்கப்படுவார்கள் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.



