தம்புத்தேகமவில் 223 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிடும் முயற்சி முறியடிப்பு

Prathees
3 years ago
தம்புத்தேகமவில் 223 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிடும் முயற்சி முறியடிப்பு

தம்புத்தேகம நகரிலுள்ள வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக வர்த்தகர் ஒருவரால் கொண்டுவரப்பட்ட 223 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிடும் முயற்சி பொலிஸ் உத்தியோகத்தரின் தலையீட்டினால் இன்று முறியடிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதம் தாங்கிய இருவர் பணத்தை திருடிவிட்டு ஓட முற்பட்ட போது, ​​தம்புத்தேகம பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் புத்திக குமார சந்தேக நபர்களை வசப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புத்தேகம பிரதேசத்தை சேர்ந்த 48 மற்றும் 50 வயதுடைய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து  துப்பாக்கி, 01 ரவைகள், மன்னா கத்தி, கையுறைகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டதுடன், பல உபகரணங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் தப்பிச் செல்லும் போது தடுக்க முயன்ற பொலிஸ் சார்ஜன்ட் மீதும் சந்தேக நபர்கள் தாக்குதல் நடத்தியதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4