நாட்டு மக்களுக்கு பயந்தே ஜனாதிபதி கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயங்களை அமைத்தார்! கயந்த கருணாதிலக
Mayoorikka
2 years ago

நாட்டு மக்களுக்கு பயந்தே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயங்களை அமைத்துள்ளதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், உயர் பாதுகாப்பு வலயங்களைச் சேர்ந்த பிரதேசங்களில் வசிப்பவர்கள் அந்த வீதிகளில் இனி நடக்கவோ அல்லது வாகனங்களில் பயணிக்கவோ முடியாது என்றார்.
இந்த வீதிகளில் செல்வதாக இருந்தால் பொலிஸ்மா அதிபர் அல்லது மேல்மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அனுமதியை பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.



