குருந்தூர் மலை பௌத்தர்களின் சொத்து – கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

Mayoorikka
2 years ago
குருந்தூர் மலை பௌத்தர்களின் சொத்து – கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு – குருந்தூர்மலை பகுதியானது தமிழர்களுடைய பகுதி அல்ல எனவும் அது முழுமையாக பௌத்தர்களின் பிரதேசம் என்பதை வலியுறுத்தி இன்று கொழும்பில் பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பு சுதந்திர சதுக்கப்பகுதியில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி புத்தசாசன அமைச்சினை நோக்கி பேரணியாக சென்றிருந்தது.

குருந்தூர்மலை பிரதேசம் தமிழர்களுடையது அல்ல, அது முழுமையாக பௌத்தர்களின் பிரதேசம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் இந்த விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகள் தான் தமது சுயலாப அரசியலுக்காக பிரச்சினையை ஏற்படுத்துவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ருரந்தவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான பௌத்தர்கள் மற்றும் பிக்குமார் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!