பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு எதிராக இரத்தினபுரியில் கையெழுத்துச் சேகரிப்பு.

Mayoorikka
2 years ago
பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு எதிராக இரத்தினபுரியில் கையெழுத்துச் சேகரிப்பு.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை இரத்தினபுரியில் நேற்று இடம்பெற்றது. 

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரி இலங்கைத் தமிழரசுக் கட்சியும், தொழிற்சங்கங்களும் இணைந்து காங்கேசன்துறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான ஊர்தி வழி கையெழுத்துப் போராட்டத்தை நடாத்தி வருகின்றன. 

இந்தக் கையெழுத்துச் சேகரிக்கும் நடவடிக்கை நேற்றைய தினம் இரத்தினபுரியில் முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் இடம்பெற்ற கையெழுத்துச் சேகரிக்கும் நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஹேஷா விதானகே, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.சுகிர்தன் உட்பட பலரும் ஈடுபட்டிருந்தனர். 

பெருமளவான மக்கள் ஆர்வத்துடன் தமது கையெழுத்துக்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!