ஜப்பானின் முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க பயணம்

Kanimoli
2 years ago
ஜப்பானின் முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க பயணம்

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார் ஏன தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இன்று (26) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக ரணில் விக்ரமசிங்க புறப்பட்டுச் சென்றதாக குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஜப்பான் சென்றுள்ள ரணில் விக்ரமசிங்க ஜப்பானிய பிரதமர் மற்றும் பல அமைச்சர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜப்பானின் முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பின்னர் அதிபர் பிலிப்பைன்ஸுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வௌிநாட்டுப் பயண காலப்பகுதியில் அவரது அலுவலக பணிகளை நிறைவேற்றுவதற்காக பதில் அமைச்சர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!