பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை புகைப்படத்தை வெளியிட்ட பக்கிங்ஹாம் அரண்மனை
#Queen_Elizabeth
Prasu
2 years ago

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையின் மேற்பரப்பில் உள்ள லெட்ஜர் கல்லின் முதல் படத்தை பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ளது.
விண்ட்சர் கோட்டைக்குள் கிங் ஜார்ஜ் VI நினைவு தேவாலயத்தின் அடிவாரத்தில் கல்லறை அமைந்துள்ளது.
கடந்த திங்களன்று, ராணி தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார், மன்னர் சார்லஸ் III மற்றும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர்.
அங்கு ராணி தனது பெற்றோர், சகோதரி மற்றும் கணவருடன் சேர்ந்தார்.
புதிய கல்லில் ஜார்ஜ் 1895-1952, எலிசபெத் 1900-2002 பிலிப் 1921-2012 மற்றும் எலிசபெத் II 1926-2022 என்று பொறிக்கப்பட்டுள்ளது.



