தைவான் மீதான வெளிநாட்டு தலையீட்டை பொறுத்துக் கொள்ள முடியாது- சீனா

Prasu
2 years ago
தைவான் மீதான வெளிநாட்டு தலையீட்டை பொறுத்துக் கொள்ள முடியாது- சீனா

தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. 

அண்மையில் அமெரிக்க சபாநாயகர் தைவானுக்கு சென்ற நிலையில் சீனா-அமெரிக்கா இடையேயான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

சீன படையெடுத்தால், தைவானை அமெரிக்கப் படைகள் பாதுகாக்கும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார். 

இந்நிலையில் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றிய சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறியுள்ளதாவது: தைவான் மீது வெளிநாட்டு தலையீட்டை சீனா பொறுத்துக் கொள்ளாது. 

தைவானை மீண்டும் சீனாவுடன் ஒன்றிணைக்கும் உறுதிப்பாட்டின் வழியில் எவரும் குறுக்கிட்டால் கால சக்கரங்களால் நசுக்கப்படுவார்கள். 

சீனா முழுவதுமாக மீண்டும் ஒருங்கிணைப்பட்டால் மட்டுமே தைவான் ஜலசந்தி பகுதியில் உண்மையான அமைதி நிலவ முடியும். 

தைவான் மீதான வெளிப்புற தலையீட்டை எதிர்க்க மிகவும் வலிமையான நடவடிக்கைகளை சீனா எடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!