நடைபவனியில் ஈடுபட்ட மக்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் – 84 பேர் கைது!

Prathees
3 years ago
நடைபவனியில் ஈடுபட்ட மக்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் – 84 பேர் கைது!

லிப்டன் சுற்றுவட்டத்திலிருந்து  டீன்ஸ் வீதி வழியாக மருதானை நோக்கிச் சென்ற பேரணியை கலைப்பதற்காக பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர்.

'போராட்டத்திற்கு புதிய ஆற்றல் - கொழும்பு திரும்பும் இளைஞர் சக்தி' என்ற தொனிப்பொருளில் சோசலிச இளைஞர் சங்கத்தினால் இந்த நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சுக்கு அருகில் உள்ள கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு பேரணியாக சென்ற குழுவினரை கலைக்க பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

அங்கு கலவரத்தில் ஈடுபட்ட 84 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் இரண்டு ஆண்களும் நான்கு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4