சாரதியின் தூக்கத்தால் பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளான லொறி

Prathees
3 years ago
சாரதியின் தூக்கத்தால் பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளான லொறி

கடுவெலயில் இருந்து ஹட்டன் நோக்கி குளிர்பான போத்தல்களை  ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியை விட்டு விலகி தேயிலைத் தோட்டத்தில் உள்ள குன்றின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லொறியின் சாரதி படுகாயமடைந்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் கினிகத்ஹேன கரோலினா வத்த பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

லொறியின் சாரதி தூங்கியமையினால் லொறி வீதியை விட்டு விலகிச் சென்று இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கினிகத்தேன பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் லாரிக்கும்இ கொண்டு செல்லப்பட்ட குளிர்பான போத்தல்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4