நிலக்கரி டெண்டரை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை: அமைச்சர் கஞ்சன விஜேசேகர

Mayoorikka
2 years ago
நிலக்கரி டெண்டரை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை: அமைச்சர் கஞ்சன விஜேசேகர

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒகஸ்ட் 25 ஆம் திகதி வழங்கப்பட்ட நிலக்கரி டெண்டரை இடைநிறுத்துவதற்கு நேற்று அமைச்சரவை நடவடிக்கை எடுத்தது.

அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில், தெரிவு செய்யப்பட்ட வழங்குனர்கள் உரிய டெண்டரை நிறைவேற்ற முடியாது என அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சட்ட தலையீடு மற்றும் பணம் செலுத்துவதில் உள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலத்திற்கு நிலக்கரி பெறுவதற்கான புதிய டெண்டருக்கான அறிவிப்பை அமைச்சகம் வெளியிடும் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

தற்போதைய நிலக்கரி தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட டெண்டரின்படி பெறப்பட வேண்டிய நிலக்கரி இருப்புக்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தனது டுவிட்டர் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!