கொழும்பில் பிரபல பாடசாலை ஒன்றின் உதவி அதிபர் செய்த அசிங்கமான செயல்

Kanimoli
3 years ago
  கொழும்பில் பிரபல பாடசாலை ஒன்றின் உதவி அதிபர் செய்த அசிங்கமான செயல்

  கொழும்பில் பிரபல பாடசாலை ஒன்றின் உதவி அதிபர் மது போதையில் பாடசாலைக்கு வருகை தந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போதையில் பாடசாலைக்கு வருகை தந்த ஆசிரியர் தனது கடமைகளை செவ்வனே நிறைவேற்றிய நிலையில், திடீரென அவர் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு செல்வதற்காக உந்துருளியில் ஏறியுள்ளார்.

எனினும் அவரால் உந்துருளியை இயக்க முடியாமையினாலும், தனது உடல் கட்டுப்பாட்டினை இழந்தமையினாலும் கீழே விழுந்துள்ளார்.

இந்நிலையில் பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் கற்கும் மாணவர்கள் கீழே விழுந்த ஆசிரியரை தூக்குவதற்கு முயற்சித்தபோதே அவர் மது போதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.

அதேசமயம் பாடசாலையில் பெற்றோர்களுக்காக மாதாந்த கூட்டமும் நடைபெறவிருந்தமையினால் பெற்றோர்களும் பாடசாலைக்கு வருகை தந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து உதவி அதிபர் மதுபோதையுடன் பாடசாலைக்கு வந்த செயலை கண்டித்து பெற்றோர்கள் அதிபருடன் முரண்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4