டீசல் கப்பலுக்கான கட்டணம் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது: பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

Mayoorikka
3 years ago
டீசல் கப்பலுக்கான கட்டணம் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது: பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

நாட்டை வந்தடைந்துள்ள டீசல் கப்பலுக்கான கட்டணம் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

கடந்த 7 ஆம் திகதி நாட்டை வந்தடைந்த 41​ ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பலுக்கே கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெட்ரோல் கப்பலிலிருந்து பெட்ரோலை தரையிறக்கும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, லங்கா நிலக்கரி நிறுவனம் 60 ஆயிரம் மெட்ரிக் தொன் நிலக்கரி அடங்கிய 5 கப்பல்கள் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்கமைய முதலாவது கப்பல் அடுத்த மாதம் 20 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4