காணாமல்போன பேராதனை பல்கலைக்கழக மாணவன் மகாவலி ஆற்றங்கரையில் இருந்து சடலமாக மீட்பு

#SriLanka #Student #Death
Prasu
2 years ago
 காணாமல்போன பேராதனை பல்கலைக்கழக மாணவன் மகாவலி ஆற்றங்கரையில் இருந்து சடலமாக மீட்பு

கடந்த வாரம் காணாமல்போன பேராதனை பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு காணாமல்போன 24 வயதான மாணவன் கண்டி - மகாவலி ஆற்றங்கரையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் யக்கல பகுதியைச் சேர்ந்தவரெனவும் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் கல்வி பயில்பவரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறித்த மாணவன் காணாமல்போயிருந்தார்.

குறித்த மாணவனால் 16 ஆம் திகதியிடப்பட்டு எழுதப்பட்ட கடிதம் மாணவனின் விடுதி அறையில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது.

மாணவனின் மரணம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!