டுபாயில் வேலைபெற்று தருவதாக கூறி பண மோசடி!

Mayoorikka
2 years ago
டுபாயில் வேலைபெற்று தருவதாக கூறி பண மோசடி!

டுபாயில் வேலை தேடும் நபர்களிடம் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் பெண் உரிமையாளர் கைது செய்யப்பட்டு செப்டம்பர் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஏஜென்சியின் நிர்வாகத்தை மேற்பார்வையிட பெண் வேறொரு நபரை பணியமர்த்தியதாகவும் அவர் துபாயில் வேலை வாங்கி தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபர் டுபாயில் வேலை வழங்குவதாக உறுதியளித்து
விண்ணப்பதாரர்களிடமிருந்து 450,000 ரூபாய் பெற்றுவந்ததாக தெரிவிக்கப்படுகின்றது

மேலும் வேலை வாய்ப்பு முகவர் நிலையங்கள் SLBFE இல் பதிவு செய்யப்பட்டுள்ளதா மற்றும் பணம் கொடுப்பதற்கு முன்னர் அவை செல்லுபடியாகும் நிறுவனங்களா என்பதை சரிபார்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களுக்கு SLBFE ஐ அதன் தொலைபேசியின் ஊடக 011-2864241 அல்லது 1989 மூலம் தொடர்பு கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!