மானிப்பாய் பகுதியில் இரண்டு வாள்களுடன் இளைஞர்கள் இருவர் பொலிஸாரால் கைது
Kanimoli
2 years ago

மானிப்பாய் பகுதியில் இரண்டு வாள்களுடன் இளைஞர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது சம்பவம் நேற்று (20.09.2022) இரவு நடந்துள்ளது.
சந்தேகநபர்கள் பயணித்த மோட்டார்சைக்கிளும் இதன்போது பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு இளைஞர்களும், அண்மையில் மானிப்பாய் கடையில் வேலை செய்த இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுகிறதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



