10 ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க மலேசியா தீர்மானம்!

Mayoorikka
3 years ago
10 ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க மலேசியா தீர்மானம்!

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்காக 10,000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க மலேசியா தீர்மானித்துள்ளது.

கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக மலேசியாவின் மனிதவள அமைச்சர் எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தொழிலாளர்களை உள்வாங்குவதற்கான தீர்மானம், இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உதவுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் ஒன்றாகும் என்று அமைச்சர் அவர் கூறினார்.

இந்த விடயம் குறித்து சர்வதேச ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், “இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கொண்டு சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதன் மூலம் அரசாங்கத்தின் நோக்கங்களை ஆதரிக்குமாறு, தொழில்தருநர்களையும், வணிகங்களையும் மலேசியாவின் மனிதவள அமைச்சர் எம்.சரவணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை தொழிலாளர்களை பணியமர்த்துவதில் ஆர்வமுள்ள முதலாளிகள் அமைச்சின் புலம்பெயர்ந்த தொழிலாளர் முகாமைத்துவ நிலையத்திற்கு oscksm@mohr.gov.my அல்லது நாட்டின் பணியாளர்கள் திணைக்களத்திற்கு jtksm@mohr.gov.my என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புவதன் மூலம் மேலதிக தகவல்களைப் பெறலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4