யாழில் பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர் கைது

#SriLanka #School #drugs #Arrest
Prasu
2 years ago
யாழில் பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர் கைது

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் "சாதா" எனும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலைக்கு அருகில் உள்ள கடை ஒன்றில்  போதைப்பொருள் விற்பனை இடம்பெற்று வருவதாக மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் கடையில் சோதனையிட்ட போது ஒரு தொகை சாதா எனும் போதை பொருளை கைப்பற்றினர். 

அதனை அடுத்து கடை உரிமையாளரை கைது செய்த பொலிஸார், மீட்கப்பட்ட போதைப்பொருளையும் கைது செய்யப்பட்ட நபரையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!