லண்டனுக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பினார்

பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்துக்கொள்வதற்காக லண்டனுக்கு குறுகிய கால விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.
ஜனாதிபதி இன்று காலை நாடு திரும்பியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கடந்த வார இறுதியில் பிரித்தானியாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
இந்த விஜயத்தின் போது பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற வைபவத்தில் ஜனாதிபதி மூன்றாவது சார்லஸ் மன்னரை சந்தித்து சிநேகபூர்வமாக உரையாடியுள்ளார்.
மேலும் பிரித்தானியாவில் வசிக்கும் புலம்பெயர் இலங்கை சமூகத்தினரையும் ஜனாதிபதி சந்தித்தார்.
பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த இந்த சந்திப்பில், பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கை வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.



