ரயில் பராமரிக்கப்படாமையே கரையோர மார்க்கத்தில் ரயில்கள் தடம்புரளும் சம்பவங்களுக்கு காரணம் - ரயில்வே தொழிற்சங்கங்கள்

Kanimoli
3 years ago
ரயில் பராமரிக்கப்படாமையே கரையோர மார்க்கத்தில் ரயில்கள் தடம்புரளும் சம்பவங்களுக்கு  காரணம் - ரயில்வே தொழிற்சங்கங்கள்

ரயில் மார்க்கங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படாமையே கரையோர மார்க்கத்தில் ரயில்கள் தடம்புரளும் சம்பவங்கள் அதிகரிப்பதற்கான காரணம் என ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கான சிறந்த தீர்வு கிடைக்காவிடின், எதிர்வரும் நாட்களில் பயணிகள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும் என லொக்கோமோட்டிவ் பொறியியலாளர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் K.A.U.கொந்தசிங்க குறிப்பிட்டார்.

கொழும்பு பிரதம செயலாளர் அலுவலகத்திற்கு அருகில் நேற்று ரயில் எஞ்சினொன்று தடம்புரண்டது.

இதன்போது காங்கேசன் துறையிலிருந்து கல்கிசை நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட ரயிலொன்று, கொள்ளுப்பிட்டியில் கடந்த வாரம் தடம்புரண்டது.

அதன் காரணமாக பல ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4