அனைத்து விகாரைகளிலும் மின்விளக்குகளை அணைக்க முடிவு - மகா சங்க சபை

Kanimoli
3 years ago
 அனைத்து விகாரைகளிலும் மின்விளக்குகளை அணைக்க  முடிவு - மகா சங்க சபை

இலங்கையில் மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் போயா (பூரணை) தினத்தன்று அனைத்து விகாரைகளிலும் மின்விளக்குகளை அணைக்குமாறு மத்திய மாகாண மகா சங்க சபையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய மாகாண மகாசங்க சபை கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18-09-2022) இடம்பெற்ற போது, பிக்குகள் குழுவொன்றினால இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

விகாரைகளுக்கான மின் கட்டணங்கள் ஐந்து முதல் ஆறு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், தனது விகாரைக்கான கட்டணம் 60,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கலஹா சிறிசாந்த தேரர் சுட்டிக்காட்டினார்.

மேலும், பூஜைகள் நடைபெறவுள்ள நிலையில், மத வழிபாட்டுத் தலங்களுக்கு இவ்வாறு அதிக கட்டணம் விதிப்பது கவலைக்குரியது என்று குற்றம் சுமத்திய அவர், இந்த விடயத்துக்கு எதிராக தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4