யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

Nila
3 years ago
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த  ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

வவுனியா ஓமந்த விளக்கு வைத்தக்குளம் பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் புகையிரதத்துடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் புகையிரதத்துடன் மோதுண்டமைக்கான சரியான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும், குறித்த நபர் புகையிரதம் வரும்போது கவனக்குறைவாக புகையிரத பாதையை கடக்கும்போது விபத்து ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் பின்னர் உயிரிழந்தவரின் சடலம் புகையிரதத்தில் ஏற்றப்பட்டு வவுனியா புகையிரத நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், அதனை வவுனியா புகையிரத நிலைய பொலிஸ் பிரிவினரிடம் ஒப்படைக்க புகையிரத அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியா விளக்கு வைத்தக்குளத்தைச் சேர்ந்த 55 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான எஸ். நகுலன் என்ற நபரின் சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4