பிரித்தானிய மகாராணியின் இறுதிச் சடங்கு: இன்று தேசிய துக்க தினம்

Mayoorikka
2 years ago
பிரித்தானிய மகாராணியின் இறுதிச் சடங்கு: இன்று தேசிய துக்க தினம்

பிரித்தானிய மகாராணி மறைந்த இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு இன்று (19)  இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் பிரித்தானிய மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாட்டில் இன்று (19) தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், அரசாங்க  நிறுவனங்களுக்கும் சிறப்பு விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். 

எவ்வாறாயினும், அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்க விடுமுறை தினம் தடையாக இருக்கமாட்டாது என பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!