மூன்று நாட்களில் தாமரை கோபுரத்திற்கு 07 மில்லியன் வருமானம்
Prathees
2 years ago

கடந்த மூன்று நாட்களில் தாமரை கோபுரத்தின் மூலம் கிடைத்த வருமானம் 7 மில்லியன் ரூபாவை தாண்டியுள்ளதாக கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது.
தாமரை கோபுரம் இவ்வளவு காலமாக திறக்கப்படாமல் இருந்தமை வருத்தமளிப்பதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
அக்டோபர் 1ம் திகதி முதல் தாமரை கோபுரம் பாடசாலை மாணவர்களுக்காக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறந்திருக்கும்.
இதன்படி பாடசாலைகளால் ஏதேனும் கோரிக்கை விடுக்கப்பட்டால் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்க முடியும் என மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
சனிக்கிழமை மட்டும் தாமரை கோபுரத்தை பார்வையிட 7,200 பேர் வந்துள்ளனர்.
கடந்த 15, 16, 17 ஆகிய மூன்று தினங்களில் சுமார் 14,000 பேர் இதனை பார்வையிட வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



