குறைந்த வருமானம் பெறும் கிராமிய இளைஞர் சமுதாயத்திற்கு ஜப்பான் அரசாங்கம் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்க முடிவு

Kanimoli
2 years ago
குறைந்த வருமானம் பெறும் கிராமிய இளைஞர் சமுதாயத்திற்கு ஜப்பான் அரசாங்கம் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்க முடிவு

குறைந்த வருமானம் பெறும் கிராமிய இளைஞர் சமுதாயத்திற்கு ஜப்பான் அரசாங்கம் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்க முன்வந்துள்ளது.

அதற்கிணங்க தொழில்நுட்ப பயிற்சி மத்திய நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதுவிடயம் குறித்த வேண்டுகோளை தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜப்பான் தூதுவர் மிசு கொஸியிடம் தெரிவித்தார்.

இருவருக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற பொழுது அமைச்சர் வேண்டுகோளை விடுத்தார்.

ஜப்பான் தூதுவர் அதற்கு மிக சாதகமான பதிலை வழங்கினார்.

இதன்மூலம் ஜப்பானில் வேலைவாய்ப்புகளை தேடிச்செல்லும் இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த வாய்ப்புக்கள் கிட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!