தென் ஆப்பிரிக்காவில் சோகம் - பள்ளி வேன் மீது லாரி மோதிய விபத்தில் 21 பேர் உயிரிழப்பு
#Accident
#Death
Prasu
2 years ago

தென்னாப்பிரிக்கா நாட்டின் குவாஸ்லு - நடால் மாகாணத்தில் ஆரம்ப பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் வகுப்பை நிறைவு செய்துவிட்டு நேற்று முன்தினம் குழந்தைகள் பள்ளி மினி வேனில் வீட்டிற்கு புறப்பட்டனர்.
அந்த வேனில் 19 குழந்தைகள், வேன் டிரைவர், உதவியாளர் என 21 பேர் பயணித்தனர். நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது சாலையின் எதிரே வந்த சரக்கு லாரி பள்ளி வாகனத்தின்மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தில் வேனில் பயணித்த 19 குழந்தைகள் உள்பட 21 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.



