சீனாவில் பயங்கர விபத்து- பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் 27 பேர் மரணம்
#China
#Accident
#Death
Prasu
2 years ago

தென்மேற்கு சீனா கிராமப்புற குய்சோ மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் 47 பேரை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 27 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மேலும் 20 பேர் படுகாயங்களுடன் மீட்கபட்டு சிகிச்சையில் உள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
குய்சோ மாகாணத்தில் கடந்த ஜூன் மாதம் அதிவேக ரெயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் ஓட்டுனர் உயிரிழந்தார்.
இதேபோல் கடந்த மார்ச் மாதத்தில் சீன பயணிகள் ஜெட் விபத்துக்குள்ளானதில் 132 பேர் பலியாகினர். இது சீனாவில் நடந்த மிக மோசமான விமான விபத்தாகும்.



