மருந்துப் பற்றாக்குறையால் உயிருக்கு ஆபத்து ஏற்படாது: சுகாதார அமைச்சர் அறிக்கை
Prathees
2 years ago

நாட்டில் மருந்துப் பொருட்களுக்கு பிரச்சினை இல்லை என எவராலும் கூற முடியாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
உயிர் சேதம் ஏற்படாத வகையில் பிரச்சினைக்கு தீர்வுகாண கடுமையாக உழைத்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
உலக நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



