கோட்டாபயவை சந்திக்க வரிசையில் நிற்கும் அமைச்சர்கள்..
Prathees
2 years ago

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திப்பதற்கு அதிக நேரம் ஒதுக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் தினமும் முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்து வருகின்றனர்.
கோத்தபாய ராஜபக்ச அரசியலில் இருந்து ஒதுங்க முயற்சித்த போதிலும் அவரை மீண்டும் அரசியலில் ஈடுபடுத்துவதே இவர்களின் நோக்கமாக உள்ளதாகவும் அறியமுடிகிறது.
இதன் காரணமாக முன்னாள் ஜனாதிபதியின் நாட்குறிப்பு கூட சில நாட்களில் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



