எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு புறப்பட்ட ரணில் விக்கிரமசிங்க!
Reha
2 years ago

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (17) அதிகாலை இங்கிலாந்து பயணமானார்.
ஜனாதிபதியுடன் 8 பேர் இந்த பயணத்தில் இணைந்துள்ளனர்.
மகாராணி இரண்டாம் எலிசபெத் சமீபத்தில் ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் காலமானார்.
அவரது உடலம் தற்போது பிரிட்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மகாராணிக்கு இறுதி மரியாதை செலுத்த கிட்டத்தட்ட பல கிலோமீட்டர் நீளமான நீண்ட வரிசையில் மக்கள் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராணியின் மறைவை அடுத்து தற்போது பெரிய பிரித்தானியா,வேல்ஸ் ஸ்கொட்லாந்து அயர்லாந்து, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் அரச தலைவராக இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மகன் மூன்றாம் சார்லஸ் மன்னர் செயற்படுகிறார்.



