அபாய வலயமாக மாறும் தென்மராட்சிப் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை
Kanimoli
2 years ago

தென்மராட்சிப் பிரதேசத்தில் 2022 ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதிக்குள் 91 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 10 டெங்கு நோயாளர்களும், மே மாதம் 6 டெங்கு நோயாளர்களும், ஜூன் மாதம் 16 டெங்கு நோயாளர்களும், ஜூலை மாதம் 6 நோயாளர்களும், ஓகஸ்ட் மாதம் 9 நோயாளர்களும், செப்டம்பர் மாதம் இதுவரை 6 டெங்கு நோயாளர்களும், சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



